கூடலூரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கையை மீறி வெளியில் நடமாடிய இருவர் மீது வழக்குப்பதிவு!

நீலகிரி: வெளிநாடுகளில் இருந்து கூடலூருக்கு வந்த இருவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட போதும் அதனை மதிக்காமல் வெளியில் நடமாடியதாக தகவல் கிடைத்ததை அடுத்து அவர்களது வீடுகளுக்கு சென்ற அதிகாரிகள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி: வெளிநாடுகளில் இருந்து கூடலூருக்கு வந்த இருவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட போதும் அதனை மதிக்காமல் வெளியில் நடமாடியதாக தகவல் கிடைத்ததை அடுத்து அவர்களது வீடுகளுக்கு சென்ற அதிகாரிகள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் தாலுகா பகுதிகளில் கடந்த சில மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களின் வீடுகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இவர்களை வீடுகளில் தனியாக இருக்கவும் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள குறிப்பிட்ட காலம் வரை அவர்கள் தனிமையாக இருந்து நோய்த்தொற்று பரவாமல் தடுக்கவும் நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மற்றும் ஊரக துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, இன்று ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மன் வயல் சுற்றுவட்ட பகுதிகளில் துபாய் அபுதாபி பஹ்ரைன் ஓமன் ஆகிய நாடுகளிலிருந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளவர்களின் கண்டறியப்பட்ட ஏழு வீடுகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

மேலும் இந்த வீடுகளில் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் தங்கியிருப்பதை அறிவிக்கும் வகையிலும் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளதை அறிவிக்கும் வகையிலும் வீடுகளின் முன்பாக ஸ்டிக்கர்கள் ஒட்டியும், அவர்களுக்கு காய்ச்சல் அறிகுறிகள் எந்த நிலையில் உள்ளது என்பதை பரிசோதித்தும் மருத்துவத் துறையினர் குறிப்பிடும் காலம் வரையில் தொடர் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தியும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 



மாவட்ட ஊரக வாழ்வாதார துறை இயக்குனர் மற்றும் மாவட்ட கொரோனா கண்காணிப்பு அலுவலருமான பாபு தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சுகாதாரத் துறையினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கூடலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய அறுபத்துநான்கு நபர்கள் குறித்த கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களையும் இதே முறையில் தனித்தனி குழுக்கள் அமைத்து கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து கூடலூருக்கு வந்த அஜித்குமார் மற்றும் விஜயபிரபா ஆகிய இருவரும் வீட்டில் தனிமைப்படுத்த போதும் அதனை மதிக்காமல் வெளியில் நடமாடியதாக தகவல் கிடைத்ததை அடுத்து அவர்களது வீடுகளுக்கு சென்ற அதிகாரிகள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். 

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...