திருப்பூர்: ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய வாழ்க்கை பாதிக்காதவாறு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் , வெளிநாட்டிலிருந்து வந்த 172 பேர் வீட்டுக்கண்கானிப்பபில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கொரோனா தடுப்பிற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு மையம் அமைக்கப்பட்டு 0421-1077 , 29711199 இலவச எண்ணை அறிவித்துள்ளனர். திருப்பூரில் உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் தினமும் 1 லட்சத்திற்கும் அதிகமான மாஸ்க் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும், திருப்பூர் மாநகராட்சியில் 10 இடங்களிலும், புறநகரில் 31 இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், விசாரனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவதாகவும், சாலைகளில் அத்திவாசிய பணிதவிர அநாவசியமாய் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்தார்.