கோவையில் கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையர்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌ முன்னிலை வகித்தார்.

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌ முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது:-

கொரோனா வைரஸ்‌ தடுப்பு பணிகளை அலுவலர்கள்‌ விழிப்புடன்‌ கண்காணிக்க வேண்டும்‌. ஏப்ரல் 14ம்‌ தேதி வரை 144 தடை உத்தரவு அமலில்‌ உள்ளதால்‌ கோவை மாநகராட்சி பொதுமக்கள்‌ முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

மாநகராட்சியின்‌ அனைத்து மண்டலங்களிலும்‌ தூய்மைப்‌ பணியாளர்கள்‌ கொரோனா வைரஸ்‌ தடுப்பு விழிப்புணாவு துண்டுப் பிரசுரங்கள்‌ வெளியிட்டும்‌, தூய்மைப்‌ பணிகளையும்‌ மேற்கொண்டு அர்ப்பணிப்புடன்‌ பணியாற்றி வருகிறார்கள்‌.

மேலும்‌, மாநகராட்சியின்‌ அனைத்து மண்டலங்களிலும்‌ ஆட்டோக்கள்‌ மூலமாக விழிப்புணாவு பிரச்சாரப்‌ பணிகளும்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியில்‌ குனியமுத்தூர்‌, கோவைப்புதார்‌, குறிச்சி, மணியகாரம்பாளையம்‌, சரவணம்பட்டி, சிங்காநல்லூர்‌, மசக்காளிபாளையம்‌, பூமார்க்கெட்‌, சாய்பாபாகாலனி, கோவை அரசு மருத்துவமனை, இராமநாதபுரம்‌, திருமால்‌ வீதி, ஆகிய இடங்களில்‌ 12 அம்மா உணவகங்கள்‌ வழக்கம்போல்‌ தொடர்ந்து செயல்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில்‌, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌ அவர்கள்‌, நகர் நல அலுவலர்‌ கே.சந்தோஷ்குமார்‌ அவர்கள்‌, உதவி ஆணையர்கள்‌ மண்டல உதவி ஆணையர்கள்‌ தி.ர.ரவி(தெற்கு), செந்தில்குமார்‌ ரத்தினம்‌(வடக்கு), மகேஷ்கனகராஜ்‌ (மத்தியம்‌) ம.செல்வன்‌ (கிழக்கு), ஏ.ஜே.செந்தில்‌ அரசன்‌ (மேற்கு), மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌ ரெ. மதியழகன்‌, உதவி நகர்நல அலுவலர்‌ வசந்த்‌ திவாகர்‌, மற்றும்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...