கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது:-
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை அலுவலர்கள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். ஏப்ரல் 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் கோவை மாநகராட்சி பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் தூய்மைப் பணியாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணாவு துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டும், தூய்மைப் பணிகளையும் மேற்கொண்டு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.
மேலும், மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் ஆட்டோக்கள் மூலமாக விழிப்புணாவு பிரச்சாரப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் குனியமுத்தூர், கோவைப்புதார், குறிச்சி, மணியகாரம்பாளையம், சரவணம்பட்டி, சிங்காநல்லூர், மசக்காளிபாளையம், பூமார்க்கெட், சாய்பாபாகாலனி, கோவை அரசு மருத்துவமனை, இராமநாதபுரம், திருமால் வீதி, ஆகிய இடங்களில் 12 அம்மா உணவகங்கள் வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன் அவர்கள், நகர் நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் அவர்கள், உதவி ஆணையர்கள் மண்டல உதவி ஆணையர்கள் தி.ர.ரவி(தெற்கு), செந்தில்குமார் ரத்தினம்(வடக்கு), மகேஷ்கனகராஜ் (மத்தியம்) ம.செல்வன் (கிழக்கு), ஏ.ஜே.செந்தில் அரசன் (மேற்கு), மக்கள் தொடர்பு அலுவலர் ரெ. மதியழகன், உதவி நகர்நல அலுவலர் வசந்த் திவாகர், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.