கோவை: இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலானதையடுத்து கோவையின் முக்கிய சாலைகள் முழுமையாக மூடப்பட்ட நிலையில், சாலையில் தேவையின்றி பயணிக்கும் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று மாலை முதல் 144 தடை உத்தரவு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், நேற்று பாரத பிரதமர் வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.
இதையடுத்து, கோவையில் உள்ள முக்கிய சாலைகள் முழுமையாக அடைக்கப்பட்டது. குறிப்பாக உக்கடம், டவுன்ஹால், காந்திபுரம் 100 அடி சாலை, பந்தய சாலை, சிங்காநல்லூர் போன்ற முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகள் பேரிகார்டுகள் மூலம் அடைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை அத்தியாவசிய தேவைகள் என்று சாலைகளில் நடமாடிய பொதுமக்களை போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர். மேலும், அவசர தேவைகளின்றி சாலைகளில் பயணம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.