கோவையில் 144 தடை உத்தரவை மீறி சாலைகளில் பயணிக்கும் பொதுமக்கள் - அறிவுரை கூறி திருப்பி அனுப்பிய போலீசார்!

கோவை: இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலானதையடுத்து கோவையின் முக்கிய சாலைகள் முழுமையாக மூடப்பட்ட நிலையில், சாலையில் தேவையின்றி பயணிக்கும் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர்.


கோவை: இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலானதையடுத்து கோவையின் முக்கிய சாலைகள் முழுமையாக மூடப்பட்ட நிலையில், சாலையில் தேவையின்றி பயணிக்கும் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று மாலை முதல் 144 தடை உத்தரவு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், நேற்று பாரத பிரதமர் வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.

இதையடுத்து, கோவையில் உள்ள முக்கிய சாலைகள் முழுமையாக அடைக்கப்பட்டது. குறிப்பாக உக்கடம், டவுன்ஹால், காந்திபுரம் 100 அடி சாலை, பந்தய சாலை, சிங்காநல்லூர் போன்ற முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகள் பேரிகார்டுகள் மூலம் அடைக்கப்பட்டது.



இந்த நிலையில், இன்று காலை அத்தியாவசிய தேவைகள் என்று சாலைகளில் நடமாடிய பொதுமக்களை போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர். மேலும், அவசர தேவைகளின்றி சாலைகளில் பயணம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...