திருப்பூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வெளிமாவட்ட தொழிலாளர்களால் பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த வெளிமாவட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியதால் பேருந்து நிலையத்தில் தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதியது.

திருப்பூர்: திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த வெளிமாவட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியதால் பேருந்து நிலையத்தில் தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதியது. 

கொரோனா பாதிப்பு உலக நாடு முழுவதும் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த பாதிப்பால் உயிரிழந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காகவும், மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக அரசு தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 31ம் தேதி வரை 144 தடை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதனிடையே, தொழில் நகரமான திருப்பூரில் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். 



இந்த நிலையில், தமிழக அரசின் 144 தடை உத்தரவையடுத்து, பின்னலாடை நிறுவனங்கள் சார்பில் ஊதியம் வழங்கப்பட்டதை அடுத்து திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்த பிற மாவட்ட தொழிலாளர்கள் சம்பளத்தை பெற்றுக் கொண்டு அவரவர் ஊர்களுக்கு செல்ல துவங்கினர். இதனால் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது. 

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...