எந்த அறிகுறியும்‌ இல்லாமல்‌ கூட உங்களுக்கு கொரோனா நோய்‌ தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கூட்டம்‌ சேர்வதை தவிர்க்க வேண்டும்‌ - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: எந்த அறிகுறியும்‌ இல்லாமல்‌ கூட உங்களுக்கு நோய்‌ கூட தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் பொது மக்கள்‌ அதிகமாக கூட்டம்‌ சேர்வதை தவிர்க்க வேண்டும்‌ என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை: எந்த அறிகுறியும்‌ இல்லாமல்‌ கூட உங்களுக்கு நோய்‌ கூட தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் பொது மக்கள்‌ அதிகமாக கூட்டம்‌ சேர்வதை தவிர்க்க வேண்டும்‌ என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ்‌ (கோவிட்‌-19) நோய்‌ தடுப்பு என்பது உலகளவில்‌ சவாலாக உள்ளது. அடிக்கடி கைகளை கழுவுவதன்‌ மூலம்‌ நம்மை பாதுகாத்து கொள்ளலாம்‌. 

கொரோனா (கோவிட்‌-19) ஒரு பேரிடர்‌. இந்த பேரிடரிலிருந்து நம்மை நாமே சமூக விலகலை (Social distancing) கடைபிடித்து காத்துக்‌ கொள்ள வேண்டும்‌.

நாம்‌ வெளிநாடுகளிலிருந்து வந்திருந்தாலோ, பாதிக்கப்பட்டவரிடம்‌ தொடர்பில்‌ இருந்தாலோ நம்மை நாமே தனிமை படுத்திக்கொள்ள வேண்டும்‌. 14 நாட்கள்‌ நம்மை நாம்‌ தனிமை படுத்திக்கொள்ளும்‌ போது அதை மற்றவர்களுக்கு நோய்‌ பரவாமல்‌ தடுப்பதற்க்கு நாம்‌ உதவுகிறோம்‌.

உங்களுக்கு தெரிந்தவர்கள்‌ யாரேனும்‌ வெளிநாட்டிலிருந்து வந்திருந்தால்‌ அவர்கள்‌ தனிமை படுத்திக்கொள்ளாமல்‌ வெளியில்‌ நடமாடினால்‌ அதை உடனடியாக காவல்‌ நிலையத்திற்கு தெரிவிக்கவும்‌.

எந்த அறிகுறியும்‌ இல்லாமல்‌ கூட உங்களுக்கு நோய்‌ கூட தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொது மக்கள்‌ அதிகமாக கூட்டம்‌ சேர்வதை தவிர்க்க வேண்டும்‌.

தேவையில்லாத பயணங்களை தவிர்க்கவும். குழந்தைகளையும்‌ 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களையும்‌ கவனமாக பார்த்துக்‌ கொள்ள வேண்டும்‌. சர்க்கரை நோய்‌ போன்ற நாட்பட்ட நோய்களுக்குள்ளானவர்கள்‌ சிறப்பு கவனம்‌ செலுத்த வேண்டும்‌. ஆரோக்கியான உணவை உண்ண வேண்டும்‌. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...