சென்னை: எந்த அறிகுறியும் இல்லாமல் கூட உங்களுக்கு நோய் கூட தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் பொது மக்கள் அதிகமாக கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் (கோவிட்-19) நோய் தடுப்பு என்பது உலகளவில் சவாலாக உள்ளது. அடிக்கடி கைகளை கழுவுவதன் மூலம் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
கொரோனா (கோவிட்-19) ஒரு பேரிடர். இந்த பேரிடரிலிருந்து நம்மை நாமே சமூக விலகலை (Social distancing) கடைபிடித்து காத்துக் கொள்ள வேண்டும்.
நாம் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்தாலோ, பாதிக்கப்பட்டவரிடம் தொடர்பில் இருந்தாலோ நம்மை நாமே தனிமை படுத்திக்கொள்ள வேண்டும். 14 நாட்கள் நம்மை நாம் தனிமை படுத்திக்கொள்ளும் போது அதை மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்க்கு நாம் உதவுகிறோம்.
உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தால் அவர்கள் தனிமை படுத்திக்கொள்ளாமல் வெளியில் நடமாடினால் அதை உடனடியாக காவல் நிலையத்திற்கு தெரிவிக்கவும்.
எந்த அறிகுறியும் இல்லாமல் கூட உங்களுக்கு நோய் கூட தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொது மக்கள் அதிகமாக கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும்.
தேவையில்லாத பயணங்களை தவிர்க்கவும். குழந்தைகளையும் 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் போன்ற நாட்பட்ட நோய்களுக்குள்ளானவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியான உணவை உண்ண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.