திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 48 வயது மதிக்கத்தக்க தொழிலதிபருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதைதொடர்ந்து அவரிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் லண்டன் சென்று சில நாட்களுக்கு முன்பு திருப்பூருக்கு திரும்பியது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அவருக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டு உள்ளது.
இதையடுத்து
அவர் கோவை சிங்காநல்லூர் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கபட்டுள்ளார்.
மேலும், அவரது மனைவி மற்றும் அவருடன் தொடர்பு உள்ளவர்கள் தனிமைபடுத்தபட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.
சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை உறுதிபடுத்தி உள்ளார்.
மேலும், கோவையில் ஸ்பெயினில் இருந்து வந்த மாணவியும் மற்றும் லண்டனிலிருந்து திரும்பிய திருப்பூரை சேர்ந்த 48 வயது நபர் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.