இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்த திருப்பூரைச் சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 48 வயது மதிக்கத்தக்க தொழிலதிபருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதைதொடர்ந்து அவரிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் லண்டன் சென்று சில நாட்களுக்கு முன்பு  திருப்பூருக்கு திரும்பியது தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அவருக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டு உள்ளது. 

இதையடுத்து

அவர் கோவை சிங்காநல்லூர் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கபட்டுள்ளார்.

மேலும், அவரது மனைவி மற்றும் அவருடன் தொடர்பு உள்ளவர்கள் தனிமைபடுத்தபட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். 

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை உறுதிபடுத்தி உள்ளார்.

மேலும், கோவையில் ஸ்பெயினில் இருந்து வந்த மாணவியும்  மற்றும் லண்டனிலிருந்து திரும்பிய திருப்பூரை சேர்ந்த 48 வயது நபர் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...