கொரோனா அச்சம்: வால்பாறையில் இடம் பெயரும் வடமாநில தொழிலாளர்களை தனிமைப்படுத்த ஆலோசனை

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து சொந்த ஊருக்கு சென்று வந்த வடமாநில தொழலாளர்களை கொரோனா அச்சத்தின் காரணமாக தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து சொந்த ஊருக்கு சென்று வந்த வடமாநில தொழலாளர்களை கொரோனா அச்சத்தின் காரணமாக தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தேயிலை தோட்டத்தில் அஸ்ஸாம் ஜார்கன்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய வட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் சில மாதங்கள் இங்கு பணி புரிந்து விட்டு பின்னர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்று சில மாதங்கள் தங்கிவிட்டு மீண்டும் திரும்பி வருகின்றனர், இப்படி இவர்கள் அடிக்கடி இடம் பெயர்ந்து வருவதால் கொரானா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது.

எனவே இதனை தடுக்கும் விதமாக, வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லக்க்ஷ்மன் தலைமையிலான மருத்துவ குழுவினர் இன்று ஷேக்கல் முடி எஸ்டேட்டில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்ளை சந்தித்து கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



இதனை தொடர்ந்து வட மாநிலங்களிலிருந்து தற்போது வந்தவர்கள் தனிமை படுத்தி வீட்டிலேயே இருக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். இதோடு தேயிலை தோட்ட மருத்துவத்துறையினர் அவர்களை கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.



மேலும் கேரள எல்லையிலுள்ள மழுக்கப்பாறை சோதனைச்சசாவடி மற்றும் அட்டக்கட்டி சோதனைச்சாவடியில் கிருமி நாசினி அடிக்கும் பணியை பார்வையிட்டு அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி கட்டாயம் அடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...