கோவையில் முககவசம், கை சுத்திகரிப்பு திரவத்தினை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை பாயும்!

கோவை: கொரோனா வைரஸ் பரவுவதலை தடுக்க தற்போது முககவசம், கை சுத்திகரிப்பு திரவம் அத்தியாவசியமான நிலையில் உள்ளதால், அதனை அதிக விலைக்கு விற்கும் மருத்தகங்கள், நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப்பொருள்‌ வழங்கல்‌ குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

கோவை: கொரோனா வைரஸ் பரவுவதலை தடுக்க தற்போது முககவசம், கை சுத்திகரிப்பு திரவம் அத்தியாவசியமான நிலையில் உள்ளதால், அதனை அதிக விலைக்கு விற்கும் மருத்தகங்கள், நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப்பொருள்‌ வழங்கல்‌ குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

கோவையில் முக கவசம் மற்றும் சானிடைசர் அதிக விலைக்கு விற்கப்படுவதாக, கோயம்புத்துர்‌ குடிமைப்பொருள்‌ வழங்கல்‌ குற்றப்புலனாய்வுத்துறைக்கு பல புகார்கள் வந்துள்ளது.



அதனையடுத்து காவல்‌ ஆய்வாளர்‌ முத்தூமாலை, காவல்‌ உதவி ஆய்வாளர்‌கள் கோவையில் உள்ள மருத்தகங்கள், மருந்து விநியோகஸ்தர்கள்‌ மற்றும்‌ மருந்து நிறுவனங்கள்‌ ஆகியவற்றில்‌ தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது, முகமூடி கவசம்‌ (Mask) மூன்றடுக்கு ரூ.10/-, இரண்டடுக்கு ரூ.8/- -க்கும்‌ விற்பனை செய்யவேண்டும்‌. மேலும்‌ கை சுத்திகரிப்பு திரவம்‌ (Hand Sanitizer) 200 ml ரூ.100/-க்கும்‌ விற்பனை செய்யவேண்டும்‌, என அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 (Essential Commodities Act 1955)-கீழ்‌ கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் விற்றால் சம்பந்தப்பட்ட மருத்தகங்கள், நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தணிக்கையின் போது குடிமைப்பொருள்‌ வழங்கல்‌ குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...