கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு பணிகளை தூய்மைப்‌ பணியாளர்கள்‌ அர்ப்பணிப்புடன்‌ மேற்கொள்ள வேண்டும்‌ - மாநகராட்சி ஆணையர்

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ ஷ்ரவன்குமார ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர்‌ திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌ முன்னிலை வகித்தார்கள்‌.

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனிஅலுவலா்‌ ஷ்ரவன்குமார ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையாளர்‌ திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌ முன்னிலை வகித்தார்கள்‌.



இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள் தெரிவித்ததாவது:-

கோவை மாநகராட்சியில்‌ கொரோனா நோய்‌ வைரஸ்‌ தடுப்பு பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள்‌ விழிப்புடன்‌ கண்காணிக்க வேண்டும்‌. தூய்மைப்‌ பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள்‌, கிருமி நாசினி மருந்துகள்‌, ஸ்பேரேயர்கள்‌, மருந்து தெளிப்பான்கள்‌ ஆகியவை போதியளவில்‌ இருப்பு வைத்து வழங்கிட தகுந்த ஏற்பாடுகளை உதவி ஆணையர்கள்‌, சுகாதார அலுவலர்கள்‌ மேற்கொள்ள வேண்டும்‌.

வீடு வீடாகச்‌ சென்று கொரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள்‌ வெளியிடும்‌ பணிகளையும்‌, கை கழுவுதல்‌ குறித்து விழிப்புணாவு செயல்முறை விளக்கத்தையும்‌ பொதுமக்களிடையே தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்‌. அனைத்து மண்டலங்களிலும்‌ பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம்‌ சீராக நடைபெற தகுந்த முன்னேற்பாடு பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள்‌ மேற்கொள்ள வேண்டும்‌.

காய்ச்சல்‌, சளி, இருமல்‌ அறிகுறி இருந்தால்‌ அரசு மருத்துவமனைகள்‌, ஆரம்ப சுகாதார நிலையங்களில்‌ தகுந்த சிகிச்சை மேற்கொள்ளவும்‌, வீடுகள்‌, சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்‌ கொள்ளவும்‌ பொதுமக்களிடையே விழிப்புணாவு ஏற்படுத்தும்‌ பணிகளை தூய்மைப்‌ பணியாளர்கள்‌ தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்‌.

மேலும்‌, மாநகராட்சியால்‌ மேற்கொள்ளப்படும்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொதுமக்கள்‌ ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...