தமிழகத்தைச் சேர்ந்த 400 பேர் கேரளாவில் இருந்து பலத்த சோதனைக்கு பின் கோவைக்குள் அனுமதி!

கோவை: தமிழக-கேரள எல்லையான கோவை வாளையார் அருகே கேரளாவிலிருந்து வந்த 400 தமிழக தொழிலாளர்கள் எல்லையில் நிறுத்தி வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் கோவைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.


கோவை: தமிழக-கேரள எல்லையான கோவை வாளையார் அருகே கேரளாவிலிருந்து வந்த 400 தமிழக தொழிலாளர்கள் எல்லையில் நிறுத்தி வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் கோவைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.



கொரோனா அச்சத்தால் கேரளாவில் உள்ள தமிழக மக்கள் தொடர்ச்சியாக தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில், இன்று கேரள மாநிலத்திலிருந்து கோவை வாளையாறு எல்லைக்குள் 400க்கும் மேற்பட்ட தமிழக தொழிலாளர்கள் குடும்பத்துடன் வந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கடும் சோதனைகளுக்கு பின் எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.



அதேபோல இந்த கூட்டத்தில் மகப்பேறு பரிசோதனைக்காக கோவை வந்த கேரளா கர்ப்பிணிப் பெண்ணும் மாட்டிக்கொண்டார். இதைத்தொடர்ந்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும், தமிழக கேரள எல்லையில் வரும் கேரள வாகனங்கள் மீண்டும் கேரளாவுக்குள் அனுப்ப காவல்துறையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...