வால்பாறையில் வாழை மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்யும் ஒற்றை யானை..!

கோவை: வால்பாறை புதிய பேருந்து நிலைய பகுதியில் தோட்டத்தினுள் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியது.

கோவை: வால்பாறை புதிய பேருந்து நிலைய பகுதியில் தோட்டத்தினுள் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியது.

கோவை மாவட்டம் வால்பாறை நகரின் முக்கிய பகுதியாக உள்ளது புதிய பேருந்து நிலையம். இதனை ஒட்டியுள்ள பகுதியில் சின்னையன் என்பவர் காய்கறி தோட்டத்துடன் வாழை பயிரிட்டுள்ளார்.



இந்நிலையில் நேற்றிரவு இப்பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை சின்னையனின் தோட்டத்தினுள் புகுந்து அங்கிருந்த வாழை மரங்களை ஒடித்து சாப்பிட்டு சேதப்படுத்தியது.



தொடர்ந்து, அங்கு பயிரிடப்பட்டுள்ள காய்கறி தோட்டங்களில் புகுந்து சேதப்படுத்தியது. காட்டு யானை வந்ததை அறிந்த சின்னையன் வனத்துறைக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டினர். இதில் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன. ஒற்றை காட்டு யானை வால்பாறை நகருக்குள் புகுந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும், அங்கிருந்து அகன்ற காட்டு யானை அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ளதால் மீண்டும் வால்பாறை நகருக்குள் வரலாம் என்ற அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் காட்டு யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...