கோவை: மேட்டுப்பாளையம் அருகே கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக அப்பகுதி கிராம மக்கள் வீடுகளில் வேப்பிலை தோரணம் கட்டியும் வாசலில் மஞ்சளை தெளித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரானோ வைரஸ் காரணமாக மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் நிலவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு கிராமங்களிலும் முழு ஒத்துழைப்பு அளித்து மக்கள் வீடுகளிலேயே இருந்தனர்.

இந்த நிலையில், கொரானோ அச்சம் காரணமாக சில கிராமங்களில் தங்களையும் குடும்பத்தையும் தற்காத்துக் கொள்ளும் விதமாக பண்டைய கால முறைப்படி வீடுகளில் வேப்பிலை தோரணம் கட்டி மஞ்சளை தெளித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள பட்டக்காரனூர் கிராமத்தில் ஏராளமானோர் இன்று மாலை தங்களது வீடுகளுக்கு வேப்பிலை தோரணம் கட்டும் பணியினை மேற்கொண்டனர். மேலும், சாமி படங்களுக்கு முன்பு வேப்பிலை வைத்து வழிபாடும் நடத்தினர்.
இவ்வாறு செய்வதால் வேப்பிலை மற்றும் மஞ்சள் கிருமினாசி என்பதால் வைரஸ் தொற்று ஏற்படாது என நம்பிக்கை தெரிவித்துள்ள இந்த கிராம மக்கள், இத்துடன் அரசு அறிவித்துள்ள கொரானோவுக்கு எதிரான அனைத்து அறிவுரைகளையும் கடைபிடித்து வருவதாக தெரிவித்தனர்.