கோவையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியாளர்களுக்கு கைதட்டி நன்றி தெரிவித்த பொதுமக்கள்..!

கோவை: கோவையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் சேவையில் ஈடுபட்டவர்களை கைதட்டியும் ஒலி எழுப்பி நன்றி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


கோவை: கோவையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் சேவையில் ஈடுபட்டவர்களை கைதட்டியும் ஒலி எழுப்பி நன்றி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

கொரோனா பரவுவதை தடுக்கும் முன்னோட்டமாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த 14 மணி நேர சுய ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுய ஊரடங்கு இன்று காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில் இரவு 09.00 மணி வரை கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை காலை 5 மணி வரை கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.



பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதற்கு பொதுமக்கள் பெரும் ஆதரவு அளித்து உள்ளனர். தமிழகத்தில் கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்கள், பேருந்துகள், லாரிகள், கால் டாக்ஸி, ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் இயங்கவில்லை. கோவையில் சுய ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.



இந்த நிலையில், கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் அனைவரும் இன்று மாலை 05.00 மணிக்கு வீட்டின் நுழைவு வாயிலில் நின்று கைதட்டல் மூலமோ, மணியோசை எழுப்பியோ நன்றியை வெளிப்படுத்துங்கள் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், கோவை சுக்ரவார்பேட்ட்டை பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வீட்டின் முன்பும் மொட்டை மாடியில் நின்று கைதட்டியும், ஒலி எழுப்பி தங்களது நன்றிகளை தெரிவித்தனர். 



மேலும், குழந்தைகள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி அவ்வழியே சென்ற காவல்துறை வாகனத்திற்கும், 108 ஆம்புலனஸ் வாகனத்திற்கும் சல்யூட் அடித்து நன்றி தெரிவித்தனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...