கோவையில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி..!

கோவை: ஸ்பெயின் நாட்டில் இருந்து கோவைக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவே கோவையில் உறுதி செய்யப்பட்ட முதல் கொரோனா பாதிப்பு, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கோவை: ஸ்பெயின் நாட்டில் இருந்து கோவைக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவே கோவையில் உறுதி செய்யப்பட்ட முதல் கொரோனா பாதிப்பு, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கோவையைச் சேர்ந்த பெண் ஸ்பெயின் நாட்டிற்கு  சென்றுள்ளார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஸ்பெயின் நாட்டிலிருந்து வெளிநாட்டவர் வெளியேற்றப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து பெங்களூர் வழியாக வந்த கோவை சேர்ந்த பெண்ணுக்கு விமான நிலையத்தில் எந்த அறிகுறிகளும் அல்லாததால் கோவைக்கு அனுப்பப்படுகிறார். 

மேலும் அவரை வீட்டில் இருந்தபடியே தனிமையில் இருக்க சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அந்த பெண் தனது வீட்டில் வழக்கம் போல இருந்துள்ளார்.

பின்னர் சில நாட்களுக்குப் பிறகு

கோவையைச் சேர்ந்த பெண்ணின் நண்பருக்கு ஸ்பெயினில் கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவர் வெளிநாட்டு சென்று வந்த தகவல்களை தெரிவித்ததையடுத்து அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் சில காரணங்களால் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 19ம் தேதி அந்த பெண்ணுக்கு கொரோனா பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளது.

பின்னர் அவருடன் எடுத்த நபர்களுக்கு பரிசோதனை முடிவு வந்த நிலையில் அவருடைய பரிசோதனை முடிவுகள் மட்டும் நேற்று இரவு வரை வரவில்லை.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

இப்படியிருக்க கோவையில் உள்ள சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் பேசியதில் கோவையைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், கொரோனா பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் குடும்பத்தார் அவருக்கு இன்று வரை எந்த அறிகுறியும் இல்லை எனவும் அவர் நலமுடன் இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவ குறிப்பில் அவருக்கு கடந்த 9 நாட்களாக காய்ச்சல் இருப்பதாக எழுதப்பட்டுள்ளது, ஏன்?, என கேள்வி எழுப்பியுள்ளனர். 



தற்போது, அந்தப் பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் போக்குவரத்தில் தொடர்புடையவர்கள் அனைவரையும் கண்காணிப்புக்குள் கொண்டுவர சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...