திருப்பூர்: திருப்பூரில் தனியாருக்கு சொந்தமான பழைய கட்டிடத்தில் வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் வீரசிவக்குமார் என்பவருக்கு சொந்தமான பழைய கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த பழைய கட்டிடத்தின் பின்புறம் தங்கியிருந்து ஊட்டி பகுதியைச் சேர்ந்த விக்கி, மன்சூர், பாபு ஆகிய 3 பேர் பராமரிப்பு வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று இரவு மது அருந்தும் பொழுது 3 பேருக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மன்சூர் மற்றும் பாபு ஆகியோர் விக்கியை கழுத்து அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் தகவல் கொடுக்க தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், உடன் தங்கியிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ஹன்டர் ஆகியோர் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.