கோவை: கோவையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக நடத்திய பொதுக் கூட்டத்தில் மத உணர்வை தூண்டும் விதமாக பேசியதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ஜான்பாண்டியன் மீது கோவை மாநகர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக மற்றும் எதிர்ப்பாக தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், கோவை ராஜவீதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக விஸ்வகர்மா சமுதாய சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு இந்து இயக்க கூட்டமைப்பின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் உரையாற்றினார். அப்போது அவர் இஸ்லாமிய சமுதாயத்தின் மீது பழி சொல் பேசியும் மத உணர்வை தூண்டியும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் ஆகியோரின் உத்தரவின் பேரில் வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலைய போலீசார் 253 / 2020 u / s 153 (A), 505 (i) (c) ஆகிய இந்திய தண்டனைச் சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.