கோவை: கோவையில் மதரீதியான மோதல்கள் உருவாகும் விதமாகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் முகநூலில் பதிவுகளை வெளியிட்ட இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து அமைப்பினருக்கும், இஸ்லாமிய அமைப்பினருக்கும் இடையே குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு தொடர்பாக பிரச்சினைகள் நிலவி வந்தது. இதனால் கோவை மாநகரம் முழுவதும் ஒரு பதட்டமான சூழலில் இருந்தது.
மேலும், இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல், பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, ஆட்டோக்கள் மீது தாக்குதல், இந்து முன்னணி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் மீது தாக்குதல் என தொடர் சம்பவங்களால் பதட்டமான சூழல் நிலவுகின்றது.
இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில், கோவை மாநகரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் ஏற்படா வண்ணம் பாதுகாப்பு அலுவல் புரிந்தும் சமூக விரோதிகளின் நடமாட்டங்களை கண்காணித்து வந்த நிலையில், ஷாஜகான் அப்துல் காதர் என்பவர் அவரது முகநூலில் இருமதத்தினரிடையே விரோதங்களை ஏற்படுத்தி மதரீதியான மோதல்கள் உருவாகும் விதமாகவும். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து, கோவை மாநகர B-1 கடைவீதி போலீசார் மேற்படி முகநூல் பதிவு சம்பந்தமாக ஷாஜகான் அப்துல் காதர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதே போல, கல்யாணராமன் என்பவர் இருமதத்தினரிடையே விரோதங்களை ஏற்படுத்தி மதரீதியான மோதல்கள் உருவாகும் விதமாகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் சில பதிவுகளை வெளியிட்டதாக ரத்தினபுரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.