கோவையில் பொது அமைதிக்கு குந்தகம்‌ விளைவிக்கும்‌ விதமாக முகநூலில்‌ பதிவுகளை வெளியிட்ட இருவர் கைது

கோவை: கோவையில் மதரீதியான மோதல்கள்‌ உருவாகும்‌ விதமாகவும்‌ பொது அமைதிக்கு குந்தகம்‌ விளைவிக்கும்‌ விதமாகவும்‌ முகநூலில்‌ பதிவுகளை வெளியிட்ட இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவையில் மதரீதியான மோதல்கள்‌ உருவாகும்‌ விதமாகவும்‌ பொது அமைதிக்கு குந்தகம்‌ விளைவிக்கும்‌ விதமாகவும்‌ முகநூலில்‌ பதிவுகளை வெளியிட்ட இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து அமைப்பினருக்கும், இஸ்லாமிய அமைப்பினருக்கும் இடையே குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு தொடர்பாக பிரச்சினைகள் நிலவி வந்தது. இதனால் கோவை மாநகரம் முழுவதும் ஒரு பதட்டமான சூழலில் இருந்தது.

மேலும், இந்து முன்னணி பிரமுகர் மீது தாக்குதல், பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, ஆட்டோக்கள் மீது தாக்குதல், இந்து முன்னணி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் மீது தாக்குதல் என தொடர் சம்பவங்களால் பதட்டமான சூழல் நிலவுகின்றது.

இந்த நிலையில், கோவை மாநகர காவல்‌ ஆணையாளர்‌ சுமித்‌ சரண்‌ உத்தரவின் பேரில், கோவை மாநகரில்‌ சட்டம்‌ ஒழுங்கு பிரச்சனை ஏதும்‌ ஏற்படா வண்ணம்‌ பாதுகாப்பு அலுவல்‌ புரிந்தும்‌ சமூக விரோதிகளின்‌ நடமாட்டங்களை கண்காணித்து வந்த நிலையில்‌, ஷாஜகான்‌ அப்துல்‌ காதர்‌ என்பவர்‌ அவரது முகநூலில்‌ இருமதத்தினரிடையே விரோதங்களை ஏற்படுத்தி மதரீதியான மோதல்கள்‌ உருவாகும்‌ விதமாகவும்‌. பொது அமைதிக்கு குந்தகம்‌ விளைவிக்கும்‌ விதமாகவும்‌ சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். 

இதையடுத்து, கோவை மாநகர B-1 கடைவீதி போலீசார்‌ மேற்படி முகநூல்‌ பதிவு சம்பந்தமாக ஷாஜகான்‌ அப்துல்‌ காதர்‌ என்பவர்‌ மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்‌.

இதே போல, கல்யாணராமன் என்பவர் இருமதத்தினரிடையே விரோதங்களை ஏற்படுத்தி மதரீதியான மோதல்கள்‌ உருவாகும்‌ விதமாகவும்‌ பொது அமைதிக்கு குந்தகம்‌ விளைவிக்கும்‌ விதமாகவும்‌ சில பதிவுகளை வெளியிட்டதாக ரத்தினபுரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...