கோவை: கொரோனா எதிரொலியால் கோவை மாவட்டம் முழுவதும் வணிக வளாகங்கள், மால்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கோவையில் ஞாயிற்றுக்கிழமை எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை உக்கடம் மொத்த மீன் மார்க்கெட் கொரோனா எதிரொலியால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கோவை மொத்த மீன் மார்க்கெட் சங்க பொதுச்செயலாளர் எஸ்ஏ. காதர் இதுதொடர்பாக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்:-
மொத்த மீன் மார்க்கெட்டின் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தின் தீர்மானத்தின்படி, கொரோனா எதிரொலியாக வரும் 22 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முக்கியமான நாளாக இருந்தாலும், அரசின் வேண்டுகோளுக்கு இணங்க விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீன் வியாபாரிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், முக கவசங்கள் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், மீனின் தேவைகள் அதிகளவில் உள்ள நிலையில் வரத்து குறைவாக உள்ளது என்றார்.
மேலும், முன்னெச்ரிக்கை நடவடிக்கையாக மார்க்கெட் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தமாக வைத்துள்ளோம். அன்று ஒருநாள் மட்டும் 3 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும்.
இரசாயன கலவைகள் இந்த மீன் மார்க்கெட்டில் கலப்பது இல்லை. மீன் வளத்துறையுடன் இணைந்து கட்டுப்பாடோடு இந்த மீன் மார்க்கெட் செயல்படுவதாக, கூறினார்.
எந்த நோய் பரவினாலும், மீன் மருத்துவ குணம் கொண்டது, எனவே மீன்களை சாப்பிட வேண்டாம் என யாரும் கூறுவதில்லை என்றார்.