கோவை: வால்பாறையில் ரூ 30 லட்சம் மதிப்பீட்டில் ஸ்டான்மோர் புதிய பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துவங்கியுள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையிலிருந்து சோலையார் அணை செல்லும் சாலையில் ஸடான்மோர் எஸ்டேட்டில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழமையான குறுகிய பாலம் உள்ளது. இந்த சாலையை வால்பாறையிலிருந்து சோலையார் அணை வரை விரிவாக்கம் செய்யும் பணி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்டான்மோர் பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய அகலமான பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்தது. மாற்றுப்பாதை அமைத்து விட்டு பழைய பாலத்தை இடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், தேயிலைத் தோட்டத்தின் சாலையில் ஒரு பகுதியில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு பழைய பாலம் இடிக்கும் பணி துவங்கியது. குரங்குமுடி, ஷேக்கல்முடி, வில்லோனி மற்றும் கேரளா செல்லும் பேருந்துகள் கனரக வாகனங்கள் ரொட்டிக்கடை வழியாக செல்கிறது. இந்த புதிய பாலம் கட்டும் பணிகள் 40 நாட்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.