பக்தர்களின் பாதுகாப்பு கருதி பொள்ளாச்சி - பழனி வரை நான்கு வழிச்சாலைக்கு அருகில் நடைபாதை வழித்தடம் அமைத்து தர கோரிக்கை!

பொள்ளாச்சி: பக்தர்களின் உயிர் பாதுகாப்பு கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் பொள்ளாச்சியிலிருந்து பழனி வரை நான்கு வழிச்சாலைக்கு அருகில் நடைபாதை வழித்தடம் அமைத்துத் தர வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கோரிக்கை மனுவை அளித்தார்.

பொள்ளாச்சி: பக்தர்களின் உயிர் பாதுகாப்பு கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் பொள்ளாச்சியிலிருந்து பழனி வரை நான்கு வழிச்சாலைக்கு அருகில் நடைபாதை வழித்தடம் அமைத்துத் தர வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கோரிக்கை மனுவை அளித்தார்.

பொள்ளாச்சியிலிருந்து உடுமலை, மடத்துக்குளம் நகரங்கள் வழியாக புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த நான்கு வழிச்சாலையை அமைக்கும் போது பழனி முருக பக்தர்கள் பல்வேறு பண்டிகை தினங்களில் பழனியை நோக்கி லட்சக்கணக்கானோர் நடந்து செல்பவர்கள் பயனடைவார்கள்.

இந்த நிலையில், பக்தர்களுடைய உயிர் பாதுகாப்பு கருதியும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் பொள்ளாச்சியிலிருந்து பழனி வரை நான்கு வழிச்சாலைக்கு அருகில் நடைபாதை வழித்தடம் அமைத்து தர வேண்டும் என்று நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களிடம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கோரிக்கை மனுவை அளித்தார்.

மேலும், திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம் வழியாக பழனி வரையிலான நான்கு வழிப்பாதை அருகிலும் நடைபாதை அமைத்துத் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்களும் உடனிருந்து கோரிக்கை மனுவை வழங்கினார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...