கொரோனோ பரவும்‌ சூழலில் தினக்கூலித்‌ தொழிலாளர்களுக்கு உணவளிப்பது சமூகத்தின்‌ பொறுப்பு -‌ சத்குரு வலியுறுத்தல்‌

கோவை: கொரோனா வைரஸ்‌ அச்சுறுத்தலால்‌ வேலை இழந்து தவிக்கும்‌ தினக்‌ கூலித்‌ தொழிலாளர்களுக்கு உணவு அளிக்க வேண்டியது நம்‌ சமூகத்தின்‌ பொறுப்பு என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு தெரிவித்துள்ளார்‌.

கோவை: கொரோனா வைரஸ்‌ அச்சுறுத்தலால்‌ வேலை இழந்து தவிக்கும்‌ தினக்‌ கூலித்‌ தொழிலாளர்களுக்கு உணவு அளிக்க வேண்டியது நம்‌ சமூகத்தின்‌ பொறுப்பு என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர்‌ சத்குரு தெரிவித்துள்ளார்‌.

கொரோனா வைரஸ்‌ தொற்று பரவி வரும்‌ தழலால்‌ உலகம்‌ முழுவதும்‌ பொருளாதாரம்‌ பெரிதும்‌ பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. விமான போக்குவரத்து, பயணம்‌ மற்றும்‌ சுற்றுலா சார்ந்த பெரும்‌ தொழில்கள்‌ அதிகம்‌ பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில்‌ அதிகம்‌ கண்டுகொள்ளப்படாமல்‌ இருக்கும்‌ ஒரு முக்கிய பிரிவினரான தினக்‌ கூலித்‌ தொழிலாளர்கள்‌ மீது உடனடி கவனம்‌ செலுத்த வேண்டியதன்‌ அவசியம்‌ குறித்து சத்குரு தனது ட்விட்டர்‌ பதிவு மூலம்‌ வலியுறுத்தி உள்ளார்‌. அதில்‌ பல நாட்களாக தொடர்ந்து வேலை இழந்து தவிக்கும்‌ கூலித்‌ தொழிலாளர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவை தினமும்‌ வழங்க வேண்டும்‌ என தெரிவித்துள்ளார்‌.

இது தொடர்பாக அவர்‌ இன்று (மார்ச்‌ 19) வெளியிட்டுள்ள ட்விட்டர்‌ பதிவில்‌, “தினக்‌ கூலி தொழிலாளர்களின்‌ வாழ்வாதாரம்‌ பாதிக்கப்படுவது, கொரோனா வைரஸ்‌ பாதிப்புகளில்‌ மிக மோசமான ஒன்றாகும்‌. உணவின்றி அவதியுறுவது உள்நாட்டு சண்டைகளுக்கும்‌, இறப்புகளுக்கும்‌ வழிவகுக்கும்‌. அவர்களுக்கு தினசரி உணவையேனும்‌ வழங்குவது இந்த சமூகத்தின்‌ பொறுப்பு. நாம்‌ அனைவரும்‌ ஒன்றாக சேர்ந்து கொரோனா வைரஸ்‌ பரவுவதை முறியடிப்போம்‌.” என்று தெரிவித்துள்ளார்‌.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...