கோவை: கோவையில் சமீப காலமாக தொடர்ந்து இரு தரப்பினருக்கிடையேயான தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையாளர் 4 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து அமைப்பினருக்கும், இஸ்லாமிய அமைப்பினருக்கும் இடையே குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்பு தொடர்பாக பிரச்சினைகள் நிலவி வந்தது. இதனால் கோவை மாநகரம் முழுவதும் ஒரு பதட்டமான சூழலில் இருந்தது.
இதனிடையே, கடந்த மார்ச் 4ம் தேதி இந்து முன்னணியின் மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, கோவை மாநகர போலீசார் அசாருதீன் மற்றும் நூர் முகமது ஆகிய இருவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதே போல, கடந்த 5ம் தேதி அதிகாலை இந்து முன்னணி பிரமுகர் ஆனந்தை தாக்கியதற்கு எதிர்வினையாக கோவை கணபதியில் உள்ள பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பைச் சேர்ந்த அகில், பா.ஜ.கவை சேர்ந்த பாண்டி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இரு தரப்பைச் சேர்ந்த 4 பேர் மீதும் கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து இதற்கான உத்தரவு சிறைத்துறைக்கு வழங்கப்பட்டது.