கோவை: கோவையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகளிர் சுய உதவிக் குழு மூலம் முக கவசம், கிருமி நாசினிகள் குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானம், பள்ளி மற்றும் கல்லூரிகள் வரும் 31ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
சுற்றுலா செல்வது வெளியூர் பயணங்களை மேற்கொள்ளுதல் பொது போக்குவரத்துகளை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், கைகளை அடிக்கடி கழுவுதல், முக கவசம் அணிவித்து வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கோவையில் முக கவசம், கிருமி நாசினிகளை குறைந்த விலையில் அனைவரும் கிடைக்கப் பெற்றிட கோவை மகளிர் திட்ட அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட முக கவசம், கிருமி நாசினி ஆகியன விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மகளிர் சுய உதவி குழுவினர் கூறுகையில், கொரோனா வைரஸ் காரணமாக முக கவசம், கிருமி நாசினிகள் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மகளிர் சுய உதவிக் குழு மூலம் தயாரிக்கப்பட்ட குறைந்த விலையிலான பொருட்களை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.

நாள் ஒன்றுக்கு ஆயிரம் முக கவசங்கள் வரை தயாரிக்கலாம் எனவும் டிஸ்போசபிள் முக கவசம் இருபது ரூபாய்க்கும் துவைத்து உபயோகிக்கக் கூடிய கவசம் 10 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக தெரிவித்தனர். கிருமி நாசினி ஒரு லிட்டர் பாட்டில் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அதிகம் பேர் பணிபுரியும் இடங்களில் முக கவசம், கிருமி நாசினிகள் தேவைப்படுவோர் மகளிர் திட்டம் மூலமாகவும் அல்லது நேரடியாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.

மேலும், பாலி பாபிளின், பருத்தி கவசங்களை மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்து வருவதாகவும் தயாரிப்பிற்கான பொருட்கள் வழங்கப்பட்டால் முக கவசங்களை மகளிர் சுய உதவி குழுவினர் தயாரித்துத் தருவதாக தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட முக கவசம், கிருமி நாசினிகளை ஏராளமானோர் வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது.