கோவை: கொரோனா அறிகுறியோடு கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை ரத்த பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில், இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றது.
இந்தநிலையில் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக நேற்று பொள்ளாச்சியை சேர்ந்த இத்தாலி நாட்டில் இருந்து வந்த 40 வயது நபர், கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து விழாவிற்கு வால்பாறைக்கு வந்த 60 வயது மூதாட்டி, மும்பை வழியாக கோவைக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இருவர், ஷார்ஜாவிலிருந்து வந்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுவன், சிங்கப்பூரில் இருந்து வந்த உடுமலைப்பேட்டையை சேர்ந்த 30 வயது நபர் என 6 பேர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த 6 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பபட்டிருந்த நிலையில் பரிசோதனையின் முடிவுகள் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வெளியாகியுள்ளது.