வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை: "நாம் அனைவரும் சுகாதாரத்தை ஒன்றினைந்து கடைபிடித்தால் கொரோனா வைரஸை எதிர்த்து போராடலாம் - ஆனைமலை புலிகள் காப்பக உதவி முதன்மை வனப்பாதுகாவலர் செல்வம்".


கோவை: "நாம் அனைவரும் சுகாதாரத்தை ஒன்றினைந்து கடைபிடித்தால் கொரோனா வைரஸை எதிர்த்து போராடலாம் - ஆனைமலை புலிகள் காப்பக உதவி முதன்மை வனப்பாதுகாவலர் செல்வம்". 

கொரோனா வைரஸ் பரவுவதலை தடுக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. 



கோவை மாவட்டம் வால்பாறை காந்தி சிலை வாளகம், பேருந்து நிலையம் மற்றும் கடைகள் ஆட்டோ ஸ்டான்டுகளில், ஆனைமலை புலிகள் காப்பக உதவி முதன்மை வனப்பாதுகாவலர் செல்வம் தலைமையில் விழிபபுணர்வு பிரச்சாரம் இன்று நடைபெற்றது.

பிரச்சாரத்தின் போது, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை கடை பிடிக்க வேண்டும், தும்மல் இருமலின் போது மூக்கு மற்றும் வாய் பகுதியை கைக்குட்டைகள் மூலம் மூட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 

இது மாதிரியான அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை அணுகி பிரச்சனையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், கொரோனா வைரஸ் குறித்து அறிகுறிகள் உள்ளவர்கள் யாருடனும் நெருங்கி பழகுதல் கூடாது. பொது இடங்களில் எச்சில் துப்புதல் கூடாது, கண்கள், வாய் மூக்கு ஆகியவற்றை தொடக்கூடாது, என ஆனைமலை புலிகள் காப்பக உதவி முதன்மை வனப்பாதுகாவலர் செல்வம் பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். 

"நாம் அனைவரும் சுகாதாரத்தை ஒன்றினைந்து கடைபிடித்தால் கொரோனா வைரஸை எதிர்த்து போராடலாம்", என தெரிவித்தார். 

தொடர்ந்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஆனைமலை புலிகள் காப்பக உதவி முதன்மை வனப்பாதுகாவலர் செல்வம், மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜ், வால்பாறை வனச்சரகர் செந்தில் குமார் மற்றும் வனவர்கள் ஊழியர்கள் பங்கு பெற்றனர்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...