கோவையில் தொழில் முதலீடு ஏற்படுத்தி தருவதாக 20 கோடி ரூபாய் மோசடி; முன்னாள் ராணுவ வீரர் சிறையில் அடைப்பு

கோவை: கோவையில் தொழிலில் முதலீடு என்ற பெயரில் 20 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோவை: கோவையில் தொழிலில் முதலீடு என்ற பெயரில் 20 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்ட நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் 44 வயதான மகன் மகன் மணி. இவர் முன்னாள் ராணுவ வீரராக பணியாற்றிய இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தொழில் முதலீடு மோசடியில் ஈபடுபட்டதாக கூறப்படுகிறது. இவர் பிரபல சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை பெறலாம் என விளம்பரம் செய்துள்ளார். மேலும் குறைந்த பட்சமாக ஒரு லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் ஒவ்வொரு மாதமும் மாதம் 22 ஆயிரத்து 500 ரூபாய் தங்கள் வங்கு கணக்குகளில் பெறலாம் எனவும் குறிப்பிட்டு விளம்பரப்படுத்தியுள்ளார்.

இந்த தொழில் முதலீட்டு விளம்பரத்தை நம்பி தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த நபர்கள் தங்களின் வசதிக்கேற்ப லட்சக்கணக்கான ரூபாய்களை முதலீடாக கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் முதலீட்டு பணத்தினை மட்டும் பெற்றுக்கொண்ட மணி இதுவரை யாருக்கும் மாதத் தொகையை கொடுக்காமலும், வாங்கிய தொகையை திருப்பி தராமலும் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவி லாரா விண்ணரசி மணி என்பவர் தன்னிடம் 5 லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டு பணத்தை திருப்பித் தர மறுப்பதாக கோவையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் முதலீட்டு பணத்தினை மோசடி செய்து தலைமறைவாக இருந்த மணியினை போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்துள்ளதாகவும் இந்த மோசடி தொகையானது 20 கோடியைத் தாண்டும் என அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை மேற்கொள்ளும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மணியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...