கோவை: கோவையில் சிஏஏக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போதும் வேண்டுமென்றே இஸ்லாமியர்களின் மீது பொய் வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்து ஒருதலை பட்சமாக செயல்படுகின்றனர் என மாவட்ட அனைத்து ஜமாத் முஸ்லிம்கள் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன், ஜனநாயகத்திற்கு எதிராக மத்திய அரசு நிறைவேற்றிய சிஏஏ, என்ஆர்சி,என்பிஆர் திட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

தமிழகத்தை பொறுத்தவரை சிஏஏக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி அமைதியான போராட்டதை முன்னெடுத்தாக கூறினார். மேலும் ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணி என போன்ற பலவழிகளைகளில் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் அறவழி போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
குறிப்பாக கோவையில் சிஏஏ க்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் அதற்கு ஆதரவாக போராட்டத்தை கையில் எடுத்தனர் இந்து அமைப்பினர். அந்த நாள் முதல் கோவை நகரில் அசாதாரண சூழல் நிலவி வருவதாகவும் ,இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.
மேலும் அமைதியான சூழலினை கெடுக்கும் வகையில் செயல்படுவோர்கள், குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாராபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் முறையாக பின்பற்றாமல் இஸ்லாமிய இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யபடுவதாகவும் , இதுவரை வழக்குகள் இல்லாதவர்கள் மீதும் யு.ஏ.பி.ஏ வழக்குகள் போடப்பட்டு உள்ளதாக கூறினார். இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் போது கோவையில் ஒரு தரப்பினர் மீது மட்டும் காவல்துறை பாராபட்சமாக செயல்படுகிறதோ? என்ற சந்தேகம் எழுவதாகவும் குற்றம் சாட்டினார்.