கோவையில் காதலியுடன் தனிமையில் இருந்த அந்தரங்க புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டிய காதலன் கைது!

கோவை: கோவை அடுத்த கணபதி நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அவரது காதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டிய சம்பவத்தில் போலீசாரால் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவை அடுத்த கணபதி நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அவரது காதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டிய சம்பவத்தில் போலீசாரால் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை கணபதி நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரசாத்(27). இவர் பீளமேடு பகுதியில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவியுடன் கடந்த சில மாதங்களாக பழகி வந்துள்ளார். இது நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகினர். இந்த பழக்கத்தின் போது காதலன் காதலியுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை எடுத்து வைத்துள்ளார்.

இந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் காதலன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இதுதொடர்பாக பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பிரசாத்தை கைது செய்த போலீசார், அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...