கொரோனாவால் ஸ்தம்பித்த ஜவுளித்தொழில்‌..! கடன்‌ செலுத்த ஓராண்டு கால அவகாசம்‌ கோரி பிரதமருக்கு சைமா வேண்டுகோள்‌!

கோவை: கொரோனா வைரஸ்‌ காரணமாக ஐவுளித்தொழிலில்‌ தற்போது நிலவும்‌ இக்கட்டான சூழ்நிலையில்‌ இருந்து மீள கடன்‌ மற்றும்‌ வட்டி செலுத்துவதற்கு வங்கிகள்‌ ஓராண்டு கால அவகாசம்‌ அளிக்க உத்தரவிட வேண்டும்‌ என்று பிரதமர்‌ அவர்களை கடிதம்‌ வாயிலாக கேட்டுக்‌ கொண்டுள்ளதாக சைமா தலைவர்‌ அஷ்வின்‌ சந்திரன்‌ தெரிவித்தார்‌.


கோவை: கொரோனா வைரஸ்‌ காரணமாக ஐவுளித்தொழிலில்‌ தற்போது நிலவும்‌ இக்கட்டான சூழ்நிலையில்‌ இருந்து மீள கடன்‌ மற்றும்‌ வட்டி செலுத்துவதற்கு வங்கிகள்‌ ஓராண்டு கால அவகாசம்‌ அளிக்க உத்தரவிட வேண்டும்‌ என்று பிரதமர்‌ அவர்களை கடிதம்‌ வாயிலாக கேட்டுக்‌ கொண்டுள்ளதாக சைமா தலைவர்‌ அஷ்வின்‌ சந்திரன்‌ தெரிவித்தார்‌.

இது குறித்து தென்னிந்திய பஞ்சாலைகள்‌ சங்கத்தின்‌ (சைமா) தலைவர்‌ அஷ்வின்‌ சந்திரன்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட்‌ 19 எனப்படும்‌ கொரோனா வைரஸ்‌ உலகளவில்‌ மக்களின்‌ வாழ்வையும்‌, தொழிற்துறை உற்பத்தி நடவடிக்கைகளையும்‌, வியாபாரத்தையும்‌ கடுமையாக பாதித்துள்ளது. இந்த வைரஸ்‌ இந்தியாவையும்‌ விடவில்லை. ஜவுளி ஆலைகளில்‌ பணிபுரியும்‌ பெரும்பாலான தொழிலாளர்கள்‌ பல்வேறு மாநிலங்களை சார்ந்தவர்கள்‌. தமிழக தொழிலாளர்கள்‌ பொது போக்குவரத்து வசதியையே உபயோகப்படுத்தி பணிக்கு வருகிறார்கள்‌. தற்போதைய சூழ்நிலையில்‌ குறிப்பாக நோய்‌ பாதிப்பு ஏற்படுவதை தடுக்க அரசு எடுத்துவரும்‌ விழிப்புணர்வு மற்றும்‌ பல்வேறு காரணங்களால்‌, புலம்‌ பெயர்ந்த தொழிலாளர்கள்‌ பலரும்‌ வேலைக்கு வருவதில்லை என்பதோடு, அவர்கள்‌ சொந்த மாநிலங்களுக்கே திரும்பிச்‌ சென்று கொண்டிருக்கிறார்கள்‌.

இந்த நிலைமை மேலும்‌ மோசமாகி அது ஒட்டு மொத்த உற்பத்தியை முடக்கும்‌ நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஏற்றுமதி, இறக்குமதி நிறுத்தம்‌, வணிக வளாகங்கள்‌ மூடல்‌ போன்ற நடவடிக்கைளால்‌ ஜவுளிப்‌ பொருட்களுக்கான தேவை பெருமளவில்‌ குறைந்துள்ளது. இதனால்‌, ஜவுளித்தொழில்‌ நிறுவனங்கள்‌ எதிர்பாராத பெரும்‌ இழப்பை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில்‌ உள்ளது. ஜவுளித்தொழில்‌ அதிக மூலதனத்தையும்‌, அதிக தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும்‌ அளிக்கும்‌ துறையாக இருப்பதனால்‌, தற்போதைய சிக்கலான சூழ்நிலையில்‌ இருந்து மீள அரசின்‌ உடனடி உதவி தேவைப்படுகிறது.

எனவே, ஐவுளித்தொழிலில்‌ தற்போது நிலவும்‌ இக்கட்டான சூழ்நிலையில்‌ இருந்து மீள கடன்‌ மற்றும்‌ வட்டி செலுத்துவதற்கு வங்கிகள்‌ ஓராண்டு கால அவகாசம்‌ (ஏப்ரல்‌ 1, 2020 முதல்‌ மார்ச்‌ 31, 2021) அளிக்க உத்தரவிட வேண்டும்‌ என்று பிரதமர்‌ அவர்களை கடிதம்‌ வாயிலாக கேட்டுக்‌ கொண்டுள்ளதாக தெரிவித்தார்‌.

சைமா தலைவர்‌ மேலும்‌ கூறுகையில்‌, இது போன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையை இதற்கு முன்‌ ஜவுளித்தொழில்‌ சந்திக்கவில்லை என்றும்‌, அதனால்‌ ஜவுளித்துறையினருக்கு மேற்படி அரசின்‌ உதவி உடனடியாக தேவை என்றும்‌ கூறியுள்ளார்‌. அவ்வாறு ஒரு வருட கால அவகாசம்‌ அளிக்கும்பட்சத்தில்‌, அது ஜவுளித்துறையினரை தற்போதைய சூழ்நிலையில்‌ இருந்து மீள உதவுவதோடு, தொழிலை காப்பாற்றவும்‌ வழி வகுக்கும்‌ என்று அஷ்வின்‌ தெரிவித்தார்‌.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...