கோவையில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி மீது மேலும் ஒரு வழக்குபதிவு

கோவை: கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் ஆர்‌.எஸ்‌.எஸ் சுந்தராபுரம்‌ நகர செயலாளரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி மீது மேலும் ஒரு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை: கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் ஆர்‌.எஸ்‌.எஸ் சுந்தராபுரம்‌ நகர செயலாளரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி மீது மேலும் ஒரு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 11ம் தேதி கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள மரச்செக்கு எண்ணெய்‌ கடையினுள்‌ வேலை செய்து கொண்டிருந்த ஆர்‌.எஸ்‌.எஸ் சுந்தராபுரம்‌ நகர செயலாளர் சூரியபிரகாஷை தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் இரும்பு ராடை கொண்டு பலமாக தாக்கினர். இதில், பலத்த காயமடைந்த அவர் சுந்தராபுரம்‌ அபிராமி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை கேஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து, படுகாயமடைந்த ஆர்‌.எஸ்‌.எஸ் சுந்தராபுரம்‌ நகரச் செயலாளர் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த டி3 போத்தனூர்‌ காவல்‌ நிலைய போலீசார், சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு சந்தேகத்தின் பேரில் உக்கடம்‌, ஜி.எம்‌ நகரை சேர்ந்த அப்துல்‌ கபூர்‌ என்பவரின்‌ மகனான முகமது ஹனீபா (41) என்பவனை பிடித்து விசாரித்த போது, அவன் கொடுத்த ஒப்புதல்‌ வாக்குமூலத்தின்‌ பேரில்‌ கூட்டு சதி செய்து இந்த குற்றச்செயலை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை 120(பி), 447,448,294(பி), 307, 506(2) பிரிவுக்கு மாற்றம்‌ செய்து தாக்குதலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமான TN 66 F 2210 என்ற எண்ணுள்ள Honda Unicorn வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், போலீசார் அவனிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில்‌, கோவை மாநகர பொது அமைதிக்கு பங்கம்‌ விளைவிக்கும்வகையில்‌ சதித்திட்டம்‌ தீட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால்‌ இவ்வழக்கின்‌ சட்டப்பிரிவுகளோடு சட்டவிரோத செயல்பாடுகள்‌ தடுப்புச்சட்டம்‌ 1967 (UAPA) பிரிவுகள்‌ 15, 16 & 18 சேர்க்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...