கோவை: கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் சுந்தராபுரம் நகர செயலாளரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி மீது மேலும் ஒரு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 11ம் தேதி கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள மரச்செக்கு எண்ணெய் கடையினுள் வேலை செய்து கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் சுந்தராபுரம் நகர செயலாளர் சூரியபிரகாஷை தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் இரும்பு ராடை கொண்டு பலமாக தாக்கினர். இதில், பலத்த காயமடைந்த அவர் சுந்தராபுரம் அபிராமி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை கேஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து, படுகாயமடைந்த ஆர்.எஸ்.எஸ் சுந்தராபுரம் நகரச் செயலாளர் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த டி3 போத்தனூர் காவல் நிலைய போலீசார், சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு சந்தேகத்தின் பேரில் உக்கடம், ஜி.எம் நகரை சேர்ந்த அப்துல் கபூர் என்பவரின் மகனான முகமது ஹனீபா (41) என்பவனை பிடித்து விசாரித்த போது, அவன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் பேரில் கூட்டு சதி செய்து இந்த குற்றச்செயலை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை 120(பி), 447,448,294(பி), 307, 506(2) பிரிவுக்கு மாற்றம் செய்து தாக்குதலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமான TN 66 F 2210 என்ற எண்ணுள்ள Honda Unicorn வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், போலீசார் அவனிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில், கோவை மாநகர பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும்வகையில் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் இவ்வழக்கின் சட்டப்பிரிவுகளோடு சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச்சட்டம் 1967 (UAPA) பிரிவுகள் 15, 16 & 18 சேர்க்கப்பட்டுள்ளது.