கொரோனா அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த இருவரின் ரத்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த இருவரின் ரத்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனோ வைரஸ் தாக்கம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த தொடரும் அச்சத்தால் அனைத்து விமான நிலையங்களும் ஸ்கிரீனிங் முறையில் கொரோனோ வைரஸ் அறிகுறிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கோவை விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையின் போது தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபருக்கு கொரோனோ அறிகுறி இருப்பது தெரியவந்தது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஏழு பேர் தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களை சுற்றிப்பார்க்க கடந்த வாரம் சென்னைக்கு வந்தனர். பின்னர் பள்ளிவாசல்களை சுற்றிப் பார்த்த அவர்கள் ஈரோடு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அந்த ஏழு பேரில் ஒருவரான நாற்பது வயது மதிக்கத்தக்கவருக்கு காய்ச்சலுடன் சளி, இருமல் பாதிப்புகள் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனிருந்தவர்கள் அவரை மீண்டும் தாய்லாந்துக்கு அனுப்ப கோவை விமான நிலையம் அழைத்து வந்தனர். அப்போது, விமான நிலையத்தில் நடைபெற்ற சிறப்புப் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு இரத்தம் மற்றும் சலி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

அதேபோல, 27 வயது மதிப்புள்ள மற்றொரு நபரும் கொரோனோ அறிகுறியுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் இன்று வெளியான நிலையில் இருவருக்கும் கொரோனா பாதிப்புகள் இல்லை என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக எழுந்த பரபரப்பு தற்போது பாதிப்புகள் இல்லை என்ற தகவல் வெளியானதையடுத்து பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...