கொரோனா எதிரொலி: பொதுமக்களின் பாதுகாப்பிற்காக சாஹின்‌ பாக்‌ வழி தொடர்‌ இருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

கோவை: கொரோனா வைரஸ்‌ வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு சாஹின்‌ பாக்‌ வழி தொடர்‌ இருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள்‌ மற்றும்‌ அரசியல்‌ கட்சிகள்‌ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கோவை: கொரோனா வைரஸ்‌ வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிட்டு சாஹின்‌ பாக்‌ வழி தொடர்‌ இருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள்‌ மற்றும்‌ அரசியல்‌ கட்சிகள்‌ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள்‌ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

உலக அளவில்‌ கொரோனா வைரஸ்‌ வேகமாக பரவி வருவதாலும்‌ நம்‌ நாடு இதை தேசிய பேரிடர்‌ என்று அறிவித்திருப்பதாலும்‌ நாட்டு மக்களின்‌ உயிரையும்‌ நலனையும்‌ கருத்தில்‌ கொண்டு அனைத்து சாஹின்‌ பாக்‌ வழி தொடர்‌ இருப்பு போராட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு பொது மக்களை தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள்‌ மற்றும்‌ அரசியல்‌ கட்சிகள்‌ கூட்டமைப்பு கேட்டுக்‌ கொள்கிறது. நாட்டு மக்கள்‌ மீது அக்கறையும்‌ நாட்டின்‌ நலனையும்‌ கருத்தில்‌ கொண்டு கூட்டமைப்பு இம்முடிவை மேற்கொண்டுள்ளது.

ஆயினும்‌ வருங்காலத்தில்‌ தமிழகத்தில்‌ என்பிஆரை நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்குமேயானால்‌ நாம்‌ தொடர்‌ இருப்பு போராட்டங்களை வீரியமாக முன்னெடுப்போம்‌ என்பதையும்‌ கூட்டமைப்பு தெரிவிக்கிறது. தமிழகத்தில்‌ என்பிஆரை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முற்படுமேயானால்‌ அனைத்து அரசியல்‌ கட்சிகள்‌ மற்றும்‌ அமைப்புகளின்‌ ஒத்துழைப்புடன்‌ பொதுமக்கள்‌ ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவார்கள்‌ என்பதை தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...