திருப்பூர்: திருப்பூரில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் வங்கியில் இருந்து பணம் எடுக்கும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர், திருப்பூர் அறிவொளி சாலையில் தொடர்ச்சியாக 31வது நாளாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று திருப்பூர் குமரன் சாலையில் உள்ள கரூர் வைசியா வங்கி முன்பாக திரண்ட இஸ்லாமியர்கள் மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, தற்போது கரூர் வைசியா வங்கியில் பணம் எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அடுத்தகட்டமாக அனைத்து வங்கிகளிலும் உள்ள பணம் எடுக்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.