கோவை: ஆட்டோக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து ஆட்டோ சங்க கமிட்டியினர் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ சங்க கமிட்டி சார்பில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையரிடம் ஆட்டோக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
பின்னர் இது குறித்து அவர்கள் கூறுகையில், மத்திய அரசு இயற்றிய சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி சட்டதிற்க்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கோவையில் சிலர் ஆட்டோக்கள் மற்றும் ஓட்டுனர்களை தாக்கி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக குற்றம் சாட்டினர். இவ்வாறான செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுத்து கைது செய்யப்பட வேண்டும் என்றனர்.
மேலும், மாநகரின் முக்கிய பகுதிகளை நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் வாடகையை நம்பி இரவு நேரங்களில் ஆட்டோக்களை இயக்கி வரும் நிலையில் அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்திட குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே ஆட்டோக்கள் இயங்க வேண்டும் என காவல்துறை உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.