கோவை: வால்பாறை தொகுதிக்குட்பட்ட சோமந்துரை சித்தூர் அரசு மேல் நிலை பள்ளியில் 5.49 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கணினி மையத்தை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு துவக்கி வைத்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த சோமந்துரை சித்தூர் அரசு மேல் நிலை பள்ளிக்குகணினி மையம் அமைத்து தரும்படி சட்டமன்ற உறுப்பினருக்கு பல முறை கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இறுதியாக வால்பாறை சட்டமன்ற உறுப்பினரின் 2019 – 2020 ஆண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5.49 லட்ச ரூபாய் செலவில் கணினி மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் புதிய கணினி மையத்தை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு இன்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இந்த விழாவின் போது தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.