கோவை: பேரூர் பகுதியில் இயங்கி வரும் எஸ்.எம்.எஸ் என்ற தனியார் கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள் கூறும்போது, கல்லூரியில் சேரும்போது நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாகவும் தற்போது, இறுதி ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் தாமதமாக பணம் செலுத்திய மாணவர்களிடம் இருந்து பல்கலைக்கழக விதிமுறைகளை மீறி அதிக பணம் வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.
இது குறித்து நிர்வாகத்திடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை எனவும் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் இது குறித்த கேள்வி எழுப்பிய பதினேழு மாணவர்களை கல்லூரி நிர்வாகம் தற்காலிக நீக்கம் செய்து உள்ளதாக தெரிவித்தனர். மேலும், துறை பேராசிரியர் நடவடிக்கை எடுக்காமல் மற்றொரு துறை பேராசிரியர் கையெழுத்திட்டு உள்ளதாக குற்றம்சாட்டினர்.
இது குறித்து கல்லூரி கல்வி இணை இயக்குனரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் இதனை தொடர்ந்து பேரூர் வட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டதாகவும் இப்பிரச்சினை குறித்து தீர்வு காணப்படும் என கூறியதை தொடர்ந்து இன்று கல்லூரிக்கு சென்ற மாணவர்களை நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை என்றனர்.
மேலும், ஒரு சில மாணவர்களை மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாகவும் மற்றவர்கள் வெளியில் நிறுத்தப்பட்டதாக கூறிய மாணவர்கள், தாமதமாக செலுத்தும் கல்வி கட்டணத்தை பல்கலை விதிமுறைக்கு உட்பட்டு செலுத்த தயாராக இருப்பதாகவும் ஆனால், நிர்வாகம் அதிக கட்டணம் வசூலிப்பதிலேயே குறியாக இருப்பதாகவும், மாணவர்கள் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.