கோவை: கோவையில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக சில மோதல் சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றது. 3 தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதில் ஒரு தாக்குதல் வழக்கில் சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
மற்ற இரு தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டனர்.
இதைத்தொடர்ந்து, அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க அனைத்து முன்னேற்பாடுகளையும் காவல்துறை செய்துள்ளது. நேற்று இரவு 127 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, நேற்று இரவு 40 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இன்றும் தொடர் வாகன சோதனை நடத்தப்படும் என்றார்.
மேலும், அனைத்து அமைப்புகளும் அமைதியை நிலைநாட்ட உதவ வேண்டும். அடுத்த ஒருவார காலத்திற்கு கோவை நகரில் போராட்டங்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை இஸ்லாமியர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளர் ரமேஷ் கிருஷ்ணா போன்ற அதிகாரிகள் உடனிருந்தனர்.