சிஏஏக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இஸ்லாமிய அமைப்பினர் சாலை மறியல் ; திருப்பூரில் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர்: தமிழகத்தில் நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலே குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் இஸ்லாமிய கூட்டமைப்பினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: தமிழகத்தில் நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலே குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் இஸ்லாமிய கூட்டமைப்பினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் கணக்கெடுப்பு பதிவேடு திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் தொடர் தர்ணா உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரிலும் குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் திருப்பூர் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் செல்லாண்டியம்மன் படித்துறை அறிவொளி சாலையில் தொடர்ச்சியாக 26-வது நாளாக தர்ணா போராட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட இஸ்லாமியர்கள் திரளாக பங்கேற்றனர்.



இந்த நிலையில் தர்ணா போராட்டம் நடத்திவரும் இஸ்லாமிய கூட்டமைப்பினர் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலே சிஏஏக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மறியல் போராட்டத்தால் காமராஜர் சாலை, மங்கலம் சாலை, பல்லடம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 



தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மாநகர உதவி ஆணையர் நவீன்குமார் பேராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பொதுமக்களை பாதிக்காத வகையில் கோரிக்கைகளை வெளிப்படுத்த வேண்டும் என போலீஸார் தரப்பில் கேட்டுக்கொண்டதன் பேரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...