தமிழகத்தின் புதிய பாஜக தலைவராக எல்.முருகனை நியமனம் செய்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் புதிய பாஜக தலைவராக எல்.முருகனை நியமனம் செய்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் செய்வதில் மிகுந்த காலதாமதம் இருந்து வந்தது.

இந்நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவரை, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். அதன்படி, எல்.முருகன் தமிழக பாஜகவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.