நீலகிரி: குன்னூர் இந்திய குடும்ப நல சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் விழிப்புணர்வு இல்லாத கருக்கலைப்பு மூலம் கருவுற்ற தாய்மார்களின் உயிரிழப்பு அதிகம் ஏற்படுவதாலும், பெண்கள் தாங்களாகவே மருந்துகள் உட்கொண்டு கருக்கலைப்பு செய்வதால் அதிகப்படியான உடல் உபாதைகள் ஏற்படுவதால் கருவுற்ற பெண்கள் நிதானமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட இந்திய குடும்பநல சங்க நீலகிரி மாவட்ட செயலாளர் அரிமாேகன் பேசுகையில், குழந்தைகள் பாேதும் என்பவர்கள் அதற்கான கருத்தடை சாதனங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் தவிர்க்க முடியாத இரண்டு வார கருவை கலைக்க ஒரு மருத்துவர் அதிகாரம் உள்ளவராக இருக்கிறார், கருவுற்ற பெண்ணின் உடல் நலனை கருத்தில் கொண்டு இது செய்யப்படுகிறது. 20 வாரங்கள் கருவை கலைக்க இரண்டு மருத்துவரின் உதவி தேவை என்று சட்டம் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், தவறான கருவளர்ச்சி நீடித்தால் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பதிவு செய்த மருத்துவரால் செய்யப்படும் கருக்கலைப்பு குற்றம் இல்லை என்று சட்டம் கூறுகிறது. 20 வாரங்களில் தற்போது உள்ள நடைமுறையின்படி நீதிமன்றம் சென்று 24 வாரங்கள் வரையிலான கருவை கலைக்க வழிவகை உள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கிய இந்திய குடும்ப குடும்ப நல சங்கத்தின் மருத்துவர் ரமா பிரதாப், பாதுகாப்பற்ற கருக்கலைப்பின் காரணமாகவும், வீட்டு வைத்திய முறைகளாலும் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய குடும்ப நல சங்க நீலகிரி மாவட்ட தலைவர் ஜி.பிரேம் ஆனந்த் கலந்து கொண்டு வரவேற்புரை நிகழ்த்தினார். கிளை மேலாளர் ஜே.வரதராஜன் பாதுகாப்பான கருக்கலைப்பு குறித்து விளக்கமளித்தார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜி.எல்.ராஜேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.