விழிப்புணர்வு இல்லாத கருக்கலைப்பு மூலம் கருவுற்ற தாய்மார்களின் உயிரிழப்பு அதிகம் - இந்திய குடும்ப குடும்ப நல சங்கம்

நீலகிரி: குன்னூர் இந்திய குடும்ப நல சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் விழிப்புணர்வு இல்லாத கருக்கலைப்பு மூலம் கருவுற்ற தாய்மார்களின் உயிரிழப்பு அதிகம் ஏற்படுவதாலும், பெண்கள் தாங்களாகவே மருந்துகள் உட்கொண்டு கருக்கலைப்பு செய்வதால் அதிகப்படியான உடல் உபாதைகள் ஏற்படுவதால் கருவுற்ற பெண்கள் நிதானமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.


நீலகிரி: குன்னூர் இந்திய குடும்ப நல சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் விழிப்புணர்வு இல்லாத கருக்கலைப்பு மூலம் கருவுற்ற தாய்மார்களின் உயிரிழப்பு அதிகம் ஏற்படுவதாலும், பெண்கள் தாங்களாகவே மருந்துகள் உட்கொண்டு கருக்கலைப்பு செய்வதால் அதிகப்படியான உடல் உபாதைகள் ஏற்படுவதால் கருவுற்ற பெண்கள் நிதானமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.



இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட இந்திய குடும்பநல சங்க நீலகிரி மாவட்ட செயலாளர் அரிமாேகன் பேசுகையில், குழந்தைகள் பாேதும் என்பவர்கள் அதற்கான கருத்தடை சாதனங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் தவிர்க்க முடியாத இரண்டு வார கருவை கலைக்க ஒரு மருத்துவர் அதிகாரம் உள்ளவராக இருக்கிறார், கருவுற்ற பெண்ணின் உடல் நலனை கருத்தில் கொண்டு இது செய்யப்படுகிறது. 20 வாரங்கள் கருவை கலைக்க இரண்டு மருத்துவரின் உதவி தேவை என்று சட்டம் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தவறான கருவளர்ச்சி நீடித்தால் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகளை கருத்தில் கொண்டு பதிவு செய்த மருத்துவரால் செய்யப்படும் கருக்கலைப்பு குற்றம் இல்லை என்று சட்டம் கூறுகிறது. 20 வாரங்களில் தற்போது உள்ள நடைமுறையின்படி நீதிமன்றம் சென்று 24 வாரங்கள் வரையிலான கருவை கலைக்க வழிவகை உள்ளது என்றார்.



இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கிய இந்திய குடும்ப குடும்ப நல சங்கத்தின் மருத்துவர் ரமா பிரதாப், பாதுகாப்பற்ற கருக்கலைப்பின் காரணமாகவும், வீட்டு வைத்திய முறைகளாலும் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய குடும்ப நல சங்க நீலகிரி மாவட்ட தலைவர் ஜி.பிரேம் ஆனந்த் கலந்து கொண்டு வரவேற்புரை நிகழ்த்தினார். கிளை மேலாளர் ஜே.வரதராஜன் பாதுகாப்பான கருக்கலைப்பு குறித்து விளக்கமளித்தார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜி.எல்.ராஜேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...