திருப்பூரில் கலப்பு திருமணம் செய்த எங்களை பெற்றோர் பிரித்துவிட்டனர் - காதலன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

திருப்பூர்: திருப்பூரில் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களை பிரித்ததால் பாதிக்கப்பட்ட இளைஞர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூரில் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களை பிரித்ததால் பாதிக்கப்பட்ட இளைஞர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம்குமார்(30) மற்றும் ஈரோட்டை சேர்ந்த சுஜாதா ஆகியோர் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த கு ராமகிருட்டிணன் தலைமையில் கலப்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.



திருமணத்திற்கு பிறகு ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், சுஜாதாவின் பெற்றோர்கள் சில நாட்களுக்கு முன்பு பிரேம்குமாரிடமிருந்து சுஜாதாவை பிரித்து சென்று, பணத்திற்காகதான் பிரேம்குமார் காதலித்ததாக சொல்லியதோடு அவரை அழைத்து மிரட்டி சுஜாதாவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று கடிதம் எழுதி வாங்கி வைத்ததாகவும், சுஜாதாவை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரேம்குமார் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அவரை தடுத்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...