இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் பலி? கர்நாடகாவில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு

கர்நாடகாவில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் ஹைதராபாத்தில் மரணம் அடைந்துள்ளார். இது இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு முதல் பலியாக கருதப்படுகிறது.



கர்நாடகாவில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் ஹைதராபாத்தில் மரணம் அடைந்துள்ளார். இது இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு முதல் பலியாக கருதப்படுகிறது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 100-க்கும் அதிகமான நாடுகளில் பரவி 4 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உலகம் முழுவதும் 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50லிருந்து 62ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கேரளாவைச் சேர்ந்த 8 பேர், ராஜஸ்தான் மற்றும் டில்லியில் தலா ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா திரும்பிய கர்நாடக மாநிலம் கல்புர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் முகமது உசைன் சித்திக். இவர், ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இவருக்கு கரோனா அறிகுறி இருந்ததால், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகக் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 62 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், கரோனா பாதித்த முதியவர் கர்நாடகத்தில் உயிரிழந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கர்நாடகா அரசு சார்பில் வெளியான செய்தி குறிப்பில், சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய கர்நாடகா மாநிலம் கல்புர்கியை சேர்ந்த முகமது உசைன் சித்திக், 76, என்ற முதியவருக்கு, கொரோனா அறிகுறி தென்பட்டது. ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த அவரின் சளி, ரத்த மாதிரிகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில், இன்று உயிரிழந்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறப்பிற்கான காரணம் சொல்லப்படவில்லை.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...